என் எதிர்காலத்தை தொண்டர்களும், மக்களும் முடிவு செய்வார்கள்... - ஓ.பன்னீர்செல்வம்
ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லிக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
அங்கு மோடியை சந்தித்த அவர் கட்சி விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், டெல்லி சரியான சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் நீதி கேட்டு தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
டிடிவி தினகரன்
இந்த சுற்றுப்பயணம் அவருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே, டெல்லி கைவிட்டால் சசிகலாவுடன் கைகோர்ப்பது என்ற முடிவில் ஓபிஎஸ் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சசிகலாவுடன் கைகோர்ப்பது மட்டுமில்லை டிடிவியோடும் இணைய வேண்டும் என்ற கணக்கில் ஓபிஎஸ் இருப்பதாகவும் பேசப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளில் இந்த சுற்றுப்பயணத்திலேயே அவர் செய்தாலும் செய்யலாம் என்கின்றனர் சிலர்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இது குறித்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், என்னுடைய எதிர்காலம் குறித்து அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் முடிவு செய்வார்கள். பன்னீர்செல்வத்தை போன்ற தூய தொண்டனை பெற்றது என் பாக்கியம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு சான்றிதழ் கொடுத்துள்ளார் என்று பேசினார்.