10-12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

O. Panneerselvam
By Nandhini Jun 20, 2022 10:45 AM GMT
Report

10-12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.

இதில் 12ம் வகுப்பு - 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு - 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதத்தடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 97.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டமும் , 95.96 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் உள்ளதாக தகவல் வெளியானிது.

10-12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து | O Panneerselvam Admk Tamilnadu

ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

10ம், 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் மனம் தளராமல், அடுத்த தேர்வில்அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், அனைவரின் எதிர்காலம் சிறக்கவும் நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.