NDA கூட்டணி? மீண்டும் அதிமுக-வில்? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மீண்டும் அதிமுக-வில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், என்னுடைய கோரிக்கை வேண்டுகோள் எல்லாமே பிரிந்து இருக்கும் அதிமுக-வின் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் என தெரிவித்தார்.
அதிமுக மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு ”ஆண்டவன் கையில் உள்ளது” என்றார்.

தேசிய ஜனநாய கூட்டணியில் உங்களை இணைத்துகொள்வீர்களா? யார் அழைப்பு விடுத்தது? என்ற கேள்விக்கு, யாரும் என்னை அழைக்கவில்லை என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.