பாஜகவுடன் கூட்டணியா? புதிய கட்சியா? ஓபிஎஸ் பரபரப்பு தகவல்
யாருடன் கூட்டணி என்பது இன்னும் சில தினங்களில் அறிவிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
யாருடன் கூட்டணி?
சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், யாருடன் கூட்டணி என்பது இன்னும் சில தினங்களில் அறிவிப்பேன். பிரதமர் கூட்டத்திற்கான அழைப்பு வரவில்லை.நான் எந்த ஒரு கட்சியை தொடங்க போவது இல்லை, எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் அதிமுக 50 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டது.
தற்போது கழக சட்டவிதிக்கு ஊடு ஏற்பட்டிருக்கிறது அவர் உருவாக்கிய சட்ட விதிகளை சில திருத்தங்கள் செய்துள்ளார்கள். ஒரே ஒரு விதியை மட்டும் ரத்து செய்யவும், திருத்தம் செய்வோம் கூடாது என சட்டவிதியில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுகவின் பொது செயலாளர் தலைமை பதவி தொண்டர்கள், அடிமட்ட தொண்டர்கள், விசுவாசம் மிக்க தொண்டர்களால் தேர்தலில் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் சட்ட விதி. அந்த சட்டவிதையை மட்டும் யாராலும் மாற்றம் செய்ய முடியாது.
ஓபிஎஸ் பதில்
இன்றைக்கு நிலைமை கழக சட்டவிதையை திருத்தம் செய்திருக்கிறார்கள். சாதாரண தொண்டன் கூட கழகப் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் இன்றைக்கு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கு பத்து மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்.
10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என திருத்தம் செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம் அங்கு உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு அவர்கள் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.
அதன் அடிப்படையில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுடைய நியாயத்தை இந்த இயக்கம் யாருக்கு எதற்காக தொடங்கப்பட்டது தலைவர் என்ன சொல்லி இருக்கிறார்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
சட்ட போராட்டத்தில் உறுதியாக வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிச்சயமாக திமுகவை வெற்றி பெற முடியாது, அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.