மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு - ஓ.பன்னீர் செல்வம் அதிரடி பதில்

Tamil nadu V. K. Sasikala O. Panneerselvam
By Sumathi Apr 09, 2023 01:30 PM GMT
Report

மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுவது குறித்து ஓபிஎஸ் தகவல் அளித்துள்ளார்.

 சசிகலாவுக்கு அழைப்பு 

மதுரை விமான நிலையத்தில், ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளகர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘திருச்சியில் எனது தலைமையில் ஏப்ரல் 24-ம் தேதி அதிமுக சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு - ஓ.பன்னீர் செல்வம் அதிரடி பதில் | O Panneer Selvam Answer Regarding Sasikala

லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். கே.சி.பழனிசாமி, அன்வர் ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கட்சியில் தான் உள்ளனர். இதற்கு முன் எங்களிடம் இணைந்து இருந்த மூத்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, அனைவருக்கும் அறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஸ்டெர்லைட் குறித்த கேள்விக்கு, நடந்து முடிந்த கதை என்று தெரிவித்தார்.