டெல்டா போல் பரவத் தொடங்கியதா ஒமைக்ரான்? - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

covid19 india deltacorona omicron
By Irumporai Dec 31, 2021 10:26 AM GMT
Report

டெல்டா வகை கொரோனாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவில் மாறிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது, கொரோனா முதல் அலை, இரண்டாவது அலையில் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது.

அது போல் தற்போது புதிய வேரியண்ட்டான ஓமைக்ரான் பாதிப்பிலும் இந்த மாநிலம்தான் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து டெல்லி உள்ளது.

இந்த நிலையில் டெல்டா வகை கொரோனாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவில் பரவி வருவதாக மத்திய அரசு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 961 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,270ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.