22 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. எட்ஜ்பேஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 303 ரன்களும், நியூசிலாந்து அணி 388 ரன்களும் எடுத்தன.

இதனையடுத்து 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 38 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அணி 10.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த டெஸ்ட் தொடரை 22 ஆண்டுகளுக்கு பின் அந்த அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil