ஒலிம்பிக்கில் போட்டியிடும் முதல் தடகள மூன்றாம் பாலினத்தவர்
transgender weightlifter
Laurel Hubbard for the Tokyo Olympics
By Petchi Avudaiappan
நியூசிலாந்து நாட்டின் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் பிரிவில் பங்கேற்க உள்ளார்.
43 வயதான அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள மூத்த வயதான தடகள வீரங்கனையாவார். கடந்த 2012க்கு பிறகு அவர் திருநங்கையாக மாறியுள்ளார். அதற்கு முன்னதாக அவர் ஆண்கள் பிரிவில் பளு தூக்குதல் பிரிவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நியூசிலாந்து அணிக்கும் பெருமையாகும் என நியூசிலாந்து ஒலிம்பிக் அணி தெரிவித்துள்ளது.
கடந்த 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளியும், 2019 பசிபிக் விளையட்டுகளில் தங்கமும் லாரல் ஹப்பார்ட் வென்றுள்ளார்.