பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் பலி - அதிர்ச்சியில் உலகநாடுகள்

Newzealand pfizervaccine
By Petchi Avudaiappan Aug 30, 2021 10:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் அமெரிக்காவில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியால் பக்க விளைவு மிக மிகக் குறைவு என்பதால் வளர்ந்த நாடுகள், தங்களுடைய நாட்டு மக்களுக்கு பைசர் தடுப்பூசியை கொள்முதல் செய்து செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்திலும் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக நியூசிலாந்தின் கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.