இளைஞர்களுக்கு கடிவாளம் போடும் நியூசிலாந்து அரசு - புகையிலைப் பொருட்கள் வாங்க தடை

newzealand bansmoking toboccoproducts
By Petchi Avudaiappan Dec 09, 2021 06:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இளைஞர்கள் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக  நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

புகைப்பழக்கம் மற்றும் புகையிலை தொழில்துறையை கட்டுப்படுத்த நியூசிலாந்து அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த  முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்க நீண்டகாலம் ஆகும் என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

எனவே இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு முழு தடை விதிக்கலாம் என நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 2027ஆம் ஆண்டில் 14 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் சிறுவர்கள் சிகரெட் வாங்க முழு தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கையை குறைப்பது அனைத்து பொருட்களிலும் நிகோடின் அளவை குறைப்பது என பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதனிடையே இளம் தலைமுறையினர் சிகரெட் பிடிக்கவே கூடாது என்ற நிலையை உருவாக்கப்போவதாகவும், இளைஞர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்ற சூழலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நியூசிலாந்து சுகாதாரத் துறை இணையமைச்சர் ஆயிஷா வெரால் தெரிவித்துள்ளார்.