ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்துல எடுக்காததுக்கு இதான் காரணமாம் : ரகசியம் சொன்ன முன்னாள் வீரர்
ரெய்னாவை யாரும் அணியில் எடுக்காததற்கு காரணத்தை நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டுல் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சைமன டூல் ரெய்னா ஒரு சிறந்த வீரராக இருக்கலாம்.
ஆனால் தோனியின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். 2020ஆம் ஆண்டு அணியிலிருந்து அவர் பாதியிலிருந்து விலகினார். இதனால் அவர் மீதான நம்பிக்கை தோனிக்கும், அணி நிர்வாகத்துக்கும் போய்விட்டது.
மேலும் கடந்த சீசனில் கடந்த சீசனின் முதல் பாதியில் ரன் எடுக்க ரெய்னா திணறினார்,. பின்னர் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் எஞ்சிய போட்டியில் விளையாடவில்லை. இது போன்ற மேலும் சில காரணங்கள் இருக்கின்றன என்று அவர் கூறினார்.
சென்னை அணிக்காக அதிக ரன்கள், அதிக அரைசதம், நாக் அவுட் சுற்றில் அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகளை ரெய்னா படைத்திருக்கிறார் என்பது உண்மைதான்.
ஆனால், அணியின் எதிர்கால திட்டத்தில் ரெய்னாவின் பங்கு இல்லை என்பதால் தான் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை எனக் கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ..ஓ., கூறினார்.
சென்னை அணி எடுக்கவில்லை என்றாலும், மற்ற அணிகள் யாரும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.