இந்தியாவை ஜெயிக்க இதான் ஒரே வழி - வெளிப்படையாக சவாலுக்கு அழைக்கும் நியூசிலாந்து பயிற்சியாளர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற நியூசிலாந்தின் திட்டம் என்ன என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றன. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியை சொந்த மண்ணில் அசைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. ஏனென்றால் இந்திய களங்களில் சுழற்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவும். ஆனால் அதனை சமாளிக்க முடியாமல் அயல்நாட்டு அணிகள் மோசமான தோல்விகளை பெற்று செல்வது வழக்கம்.
ஆனால் இந்தியாவுக்கு எப்போதுமே தலைவலியாக விளங்கும் நியூசிலாந்து அணியும் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக இருக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான திட்டம் குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் அயல்நாட்டு அணிகள் எப்படி டெஸ்ட் தொடரை தோல்வியடைந்தன என்பது குறித்து பார்க்க வேண்டும். அப்போது தான் என்ன சவால் காத்துள்ளது என்பது தெரியவரும். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்பது தான் வழக்கமான ஃபார்முலா. ஆனால் இந்தியாவில் அது எடுபடாது. இங்கு 3 ஸ்பின்னர்கள் தேவை.
இந்த தொடரில் நியூசிலாந்து தரப்பில் 3 ஸ்பின்னர்களை நீங்கள் காணலாம். அது களம் எப்படி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடலாம். முதல் டெஸ்ட் நடைபெறும் கான்பூரில் கருப்பு மணலும், 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மும்பையில் செம்மண்ணும் இருக்கும். எனவே அதற்கேற்றவாறு பழகிக்கொள்ள வேண்டும். எங்களுக்கு இங்குள்ள நல்ல விஷயம் என்னவென்றால் இரண்டு போட்டியும் வெவ்வேறு இடத்தில் நடைபெறுகிறது. இதனால் களங்களை பொறுத்து ஆட்டத்தின் அணுகுமுறை மாறுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
You May Like This