அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய கான்வே - சொந்த மண்ணில் திணறும் இங்கிலாந்து

ENG vs NZ
By Petchi Avudaiappan Jun 03, 2021 03:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் அறிமுக வீரராக களம் இறங்கிய டேவான் கான்வே 136 ரன்களுடன் இந்த இரண்டாம் ஆட்டத்தை தொடர்ந்தார்.

அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய கான்வே - சொந்த மண்ணில் திணறும் இங்கிலாந்து | Nz Allout For 378Runs In 1St Innings

இன்றும் சிறப்பாக விளையாடிய கான்வே சிக்ஸர் அடித்து தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இறுதியாக 200 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 18 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.