249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நியூசிலாந்து - இனி என்ன நடக்கும்?

World test championship Ind vs nz
By Petchi Avudaiappan Jun 22, 2021 03:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நான்காம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நியூசிலாந்து - இனி என்ன நடக்கும்? | Nz Allout For 249Runs In 1St Innings

இந்நிலையில் இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் சற்று காலதாமதமாக தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 99.2 ஓவரில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை விளையாட தொடங்கியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இப்போட்டியை டிராவை நோக்கி நகர்ந்துள்ளது.