அடுத்த வார ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன? இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதனை நீட்டிப்பது பற்றியும், கூடுதல் தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொற்று அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என கூட்டத்தில் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் காலையில் நடைப்பயிற்சிக்கு அனுமதி அளிப்பது, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது போன்ற தளர்வுகளை அளிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது