ஆண் குழந்தை பெற்ற பிரபல நடிகை - குவியும் வாழ்த்து
பிரபல பெங்காலி நடிகையும் எம்பியுமான நஸ்ரத் ஜஹானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜ் சக்கவர்த்தியின் ஷோட்ரு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நஸ்ரத் ஜஹான் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல நடிகையாக உள்ளார்.
இதனிடையே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஸ்ரத் அதே ஆண்டிக் தொழிலதிபர் நிகில் ஜெயினை துருக்கியில் வைத்து திருமணம் செய்தார்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் தனது திருமணம் சட்டபூர்வமானது அல்ல என்று கூறி கணவரை பிரிந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள நியோடியா மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் குழந்தை பிறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிகில், எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனினும், புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கும், குழந்தையின் தாய்க்கும் என் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Sandhya Raagam: ஜானகி கழுத்தில் ஏறிய தாலி! வீடியோவை வெளியிட்ட கார்த்திக்... பரபரப்பான ப்ரொமோ Manithan
