மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் போலீஸுக்கு பயந்து தலைமறைவு
மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த மாணவிக்கு மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த சமாதானபுரம் பகுதியில் சுகுமார் என்பவர் தனியார் பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
சுகுமாரின் மருத்துவனையில் நர்சிங் மாணவி ஒருவர் செய்முறை பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் பயிற்சி பெற்று வந்த மாணவிக்கு சுகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை மாணவி கடுமையாக கண்டித்ததால் நடந்த சம்பவத்தை பற்றி வெளியில் சொல்லக்கூடாது என சுகுமார் மாணவியை மிரட்டியுள்ளார்.
ஆனால் மாணவி தனக்கு நேர்ந்ததை வீட்டில் பெற்றோரிடத்தில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மருத்துவர் சுகுமார் மீது புகார் அளித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதை அறிந்த பல் மருத்துவர் சுகுமார் மருத்துவமனையை இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள மருத்துவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.