நர்சிங் கல்லுாரி மாணவி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை..!
நர்சிங் கல்லுாரி மாணவி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுமதி. இவர் சென்னை திருவேற்காட்டில் உள்ள செண்பகம் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.
மேலும் நர்சிங் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் இவர் இன்று கல்லூரிக்கு சென்று விட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, விடுதியில் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் அவரது தோழிகள் கதவை தட்டி உள்ளனர். கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுமதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு காவல்துறையினர் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி காதல் விவகாரத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.