3 மாதமாக ஊதியம் இல்லாமல் பணியாற்றும் செவிலியர்கள்
nurse
pay
By Irumporai
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 45 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கொரோனா தடுப்பு வார்டில் வேலைப்பார்த்து வருகின்றனர்.
file:
நாள்தோறும் 12 மணிநேரம் பணியாற்றும் இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகைக்கூட தரமுடியவில்லை என செவிலியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.