செவிலியர்கள் போராட்டத்தை சிலர் தூண்டிவிடுகின்றனர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சிலரின் தூண்டுதலால்தான் செவிலியர்கள் போராட்டம் நடத்துவதாக அமைச்சர் மா,சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செவிலியர்கள் போராட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர் பெருநகரங்களில் மட்டுமே பணியாற்றிய சிறுவர்களுக்கு சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. ரூ.14 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போதுரூ.18ஆயிரம்வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
அமைச்சர் குற்றச்சாட்டு
பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்க்க மாவட்ட வாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் கோப்புகளை பரிசீலிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
2300 செவிலியர்களை பணிகள் அமர்த்த ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர்கள் சிலரின் தூண்டுதலால் தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.