சாலையில் உயிருக்கு போராடிய நபர்! செவிலியரின் சிகிச்சையால் நடந்த அதிசயம்

By Fathima Dec 04, 2021 06:43 AM GMT
Report

சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வசந்த் என்ற மாணவர், வனஜா என்ற செவிலியரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருவாரூரின் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருபவர் வனஜா.

தன்னுடைய குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த போது, மதுக்கூர் சாலையில் உள்ள லெக்கணாம்பேட்டை அருகே நடந்த விபத்தில் சிக்கி, வசந்த என்ற மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே சற்றும் தாமதிக்காமல், வனஜா, வசந்தின் மார்பில் கைகளை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சையளித்தார்.

இதனால் வசந்தின் இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது, உடனடியாக 108 ஆம்புலன்சும் வந்துவிட மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாக வனஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அந்த மாணவர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லியம்பட்டினத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் வசந்த் என்பதும், இவரது சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி என்பது தெரிய வந்திருக்கிறது.

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவர் வசந்த்திற்கு, கொஞ்சமும் தாமதிக்காமல் அவசர முதலுதவி சிகிச்சை அளித்த செவிலியர் வனஜாவுக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.   

சாலையில் உயிருக்கு போராடிய நபர்! செவிலியரின் சிகிச்சையால் நடந்த அதிசயம் | Nurse Performed Cpr To Save A Youth S Life