திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்.. காதலன் செய்த வெறிச்செயல் - பகீர் பின்னணி!
நர்ஸ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம்
கர்நாடக மாநிலம் பெங்களுருவை அடுத்த ஹாவேரி ராட்டிஹள்ளி மசூரு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சுவாதி( 22). செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 3ம் தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திருமபவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போன் செய்து பார்த்துள்ளனர். அப்போது சுவிஸ் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்க்கொண்டனர்.
இதற்கிடையே கடந்த 6ம் தேதி ராணிபென்னுார் அருகே பட்டேபுரா கிராமத்தில், துங்கபத்ரா ஆற்றில் ஒரு இளம்பெண்ணின் உடல் மிதந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்த்தனர். அது காணமல் போன சுவாதி என்பது தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனையின் முடிவில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரனையில் ஈடுப்பட்டனர். அப்போது சுவாதியும் ஹிரேகெரூர் தாலுகா ஹெல்விராப்பூர் கிராமத்தை சேர்ந்த நயாசுக்கும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் நடைப்பெறாது என கூறி சுவாதியை மற்றுத்துள்ளார். தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நயாசை வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நயாஸ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காதலன் நயாசை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வினய், துர்க்காச்சாரி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.