ஒரு நம்பர் பிளேட்டின் விலை ரூ.122 கோடியா ? கின்னஸ் சாதனை படைத்த ஏலம்
நடு இரவில் சாலைகளில் நடனமாடும் சைக்கோ கில்லர் பெண் ஒருவர் குறித்த வீடியோ வைரலாகி பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
நமபர் பிளேட்
துபாயில் கார்களின் நம்பர் பிளேட் ஏலம் நடத்தப்பட்டது. அதில் ஒரு நபர் 55 மில்லியன் திர்ஹாம்களுக்கு ‘பி 7’ பதிவு நம்பர் பிளேட்டை வாங்கினார். இது இந்திய பணமதிப்பில் ரூ. 122.5 கோடிக்கு சமம். இந்த ஏலத்தை ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் மற்றும் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.

கின்னஸ் சாதனை
இதற்கு முன்னதாக 121 கோடி ரூபாய் மதிப்பிலான எஃப் 1 பதிவு நம்பர் பிளேட் வாங்கியதே கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. இந்த ஏலத்தின் அனைத்து தொகைகளும்‘1 பில்லியன் மீல்ஸ் என்டோமென்ட்’ என்ற மிகப்பெரிய ரமலான் பண்டிகை உணவு உதவி நிதிக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.