தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருக்கிறது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

child kamal tamilnadu
By Jon Mar 09, 2021 01:19 PM GMT
Report

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது. பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்கள் குடும்பம் காக்க உழைக்க சென்றுவிட்டார்கள். தமிழகம் ஏழ்மையில் தகிப்பதன் அடையாளம்தான் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.