குடித்தால் கலராகலாமா? ஒயின் குடித்து தள்ளாடிய மாணவிகள்
ஒயின் குடித்தால் கலராகலாம் என்று யாரோ சொன்ன தகவலை கேட்டு ஒயின் குடித்து 3 மாணவிகள் காவல் நிலையத்தில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் மாணவிகள்
தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது என புகார் எழுந்துள்ளது.இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பேசினார்.
மேலும், தமிழகதில் உள்ள பல்வேறு இடங்களில் தற்போது போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிகள் 3 பேர் ஒயின் குடித்து பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.
ஒயின் குடித்தால் கலராகலாம்
கரூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் மூன்று பேரும் பிளஸ்-1 படித்து வருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்த மூவரும் மறுதேர்வு எழுத வேறு பள்ளிக்கு சென்றுள்ளனர். தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளிய வந்த இவர்கள் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர். "ஒயின் குடித்தால் கலராகலாம்" என்று யாரோ சொன்னதை கேட்டு ஒயின் குடித்துள்ளனர்.
போலிசாரிடம் ஒப்பாரி
போதையில் அவர்கள் மூவரும் தடுமாறிக்கொண்டே சென்றுள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி கடைக்காரர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் குடித்துவிட்டு போதையில் உள்ளனர் என்பதை கண்டறிந்ததும் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு மூவரும் தெரியாமல் குடித்துவிட்டோம் என்று போலீசாரிடம் அழுது புலமைப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
போதை தொடர்பான விஷயங்களை மாணவர்கள் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று அரசு கூறிவரும் நிலையில் தற்போது இந்த மாணவிகள் செய்த காரியம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.