தம்பி விஜய் தலைமையிலான புதிய அரசு - சீமான் வாழ்த்து

Vijay Seeman Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 05, 2026 11:30 AM GMT
Report

முதல்வராக பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வராக உள்ள விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

தம்பி விஜய் தலைமையிலான புதிய அரசு - சீமான் வாழ்த்து | Ntk Seeman Wishes To Tvk Vijay New Govt

நாளை மறுநாள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து. விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோசப் விஜய் என்னும் நான்.. முதல்வராக பதவியேற்கும் தேதி, இடம் குறித்த தகவல்

ஜோசப் விஜய் என்னும் நான்.. முதல்வராக பதவியேற்கும் தேதி, இடம் குறித்த தகவல்

முதல் தேர்தலிலே பெருவாரியான வெற்றியை பெற்று ஆட்சியை பிடிக்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு சீமான் வாழ்த்து

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தம்பி விஜய் தலைமையிலான புதிய அரசு - சீமான் வாழ்த்து | Ntk Seeman Wishes To Tvk Vijay New Govt

வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்" என தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான்போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 4வது இடத்திற்கு சென்று டெபாசிட்டை இழந்துள்ளார்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 35 லட்சம் வாக்குகளுடன் 8.19% பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்த தேர்தலில் 1,972,537 வாக்குகளுடன் 4% பெற்று முதல்முறையாக வாக்கு வங்கியில் சரிவை சந்தித்துள்ளது.