என் ஊருக்குள் வரவே எனக்கு வெட்கமாக உள்ளது - சீமான் ஆதங்கம்

Seeman
By Karthikraja Oct 27, 2026 10:42 AM GMT
Report

seeman says i feel shame to come my native: என் ஊருக்குள் வரவே எனக்கு வெட்கமாகவும், அவமானாக உள்ளதாவும் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

என் ஊருக்குள் வரவே வெட்கமாக உள்ளது

மருது சகோதரர்களின் நினைவுநாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்வணக்கம் செலுத்தினார். 

என் ஊருக்குள் வரவே எனக்கு வெட்கமாக உள்ளது - சீமான் ஆதங்கம் | Ntk Seeman Says I Feel Shame To Come My Native

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த கேள்விக்கு சிரிப்புதான் வருகிறது என கூறினார்.

மேலும், 4 தொகுதியிலும் என்னை தோற்கடித்து விட்டு நீங்கள் மண்ணின் மகன், குற்ற சம்பவங்கள் பெருகுகிறது என்றால் என்ன சொல்ல? எனக்கு என் ஊருக்குள் வர வெட்கமாகதான் உள்ளது, அவமானமாகதான் உள்ளது. 

என் ஊருக்குள் வரவே எனக்கு வெட்கமாக உள்ளது - சீமான் ஆதங்கம் | Ntk Seeman Says I Feel Shame To Come My Native

தெருதெருவாக கத்தினேன், ஒவ்வொரு போராட்டத்திலும் நின்னேன், வரலாறு எல்லாம் எடுத்து பேசினேன், ஆனாலும்.. கஷ்டமாக தானே இருக்கும்.

மின்சாரத்தை வாங்குவதில் செய்யும் முதலீட்டில், ஏன் உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை. மின்சாரம் வாங்க கடன் வாங்கும் போது, மின்சாரம் உற்பத்தி செய்ய ஏன் கடன் வாங்க கூடாது? உற்பத்தி செய்திருந்தால் தமிழ்நாடு மின்சாரத்தில் தன்னிறைவு அடைந்திருக்கும்.

ஒரு யூனிட் ரூ.35க்கு வாங்கும் போது ரூ.2000 கோடி, 3,000 கோடி கமிஷன் கிடைக்கிறது. அதானி கமுதியில் ரூ4,500 கோடிக்கு சூரிய ஒளி மின் பூங்கா வைத்திருக்கிறார். முதலீடு செய்ய ரூ.4.500 கோடி தமிழக அரசிடம் இல்லையா?

அரசுக்கு வருவாய் வரும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு விட்டது. விமான எரிபொருளுக்கான (VAT) வரியைக் குறைப்பதால் விமான நிறுவன முதலாளிகளுக்கே லாபம். சாமானிய மக்களுக்கு என்ன பயன்?

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது விவகாரத்தைத் தவறு எனக் கூறமுடியாது. ஏனென்றால் கடந்த கால ஆட்சிகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இல்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது ஏன் நடவடிக்கை எடுக்குறீங்க என கேட்க முடியாது" என தெரிவித்துள்ளார்.