"ஏ.ஆர்.ரஹ்மானை அரசியல் ரீதியாகவோ மத ரீதியாகவோ தாக்கினால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” - சீமான் எச்சரிக்கை

arrahman ntkseeman hindicontroversy
By Swetha Subash Apr 13, 2022 02:42 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மத ரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது என்றும் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு , 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரியை குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். 

தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மானிடம், இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்து பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் என படு கூலாக பதில் கூறிவிட்டு ஏ,ஆர்.ஆர் காரில் ஏறிச்சென்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தித்திணிப்புக்கெதிரானக் கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மத ரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.’ என தெரிவித்துள்ளார்.