இது தமிழ்நாடு இஷ்டம் இருந்தால் இரு, இல்லாட்டி ஓடு - ஆளுநரை விமர்சித்த சீமான்

Seeman
By Irumporai Jan 07, 2023 11:23 AM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகம் , தமிழ்நாடு குறித்து பேசியது தற்போது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

இஷ்டம் இருந்தால் இரு

அப்போது அவரிடம் பேசும் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வலியுறுத்திய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய சீமான் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்பே திருநெல்வேலியில் கல்வெட்டு இருக்கிறது. எங்கள் நாடு தமிழ்நாடு என கூறிய சீமான்

 வேற வேலை இல்லை

இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு. இது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரியாக இருக்கும். தேவையில்லாதவற்றை பேசிக்கொண்டிருக்க கூடாது. ஆளுநருக்கு வேலையே இல்லை நமக்கு கோடி வேலை இருக்கின்றது என சீமான் கூறினார்.