''சின்ன பசங்கனு அடிச்சுட்ட...நானா இருந்தா'' - கொந்தளித்த சீமான்

Seeman dmk angry NTK
By Irumporai Dec 22, 2021 08:34 AM GMT
Report

அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை, ஆக்கிரமிப்பு இடங்கள் என்று கூறி சென்னை மாநகராட்சி இடித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், " கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு இடங்கள் என்று கூறி 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முன்கூட்டியே மக்களுக்கு இது குறித்த அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிட்டு இருந்தால் மாற்று இடம் , நிவாரணம் குறித்து ஏன் இன்னும் முதல்வர் பேசாமல் இருக்கிறார். ஆக்கிரமிப்பு என்று அதிகாரிகளின் பேசுகின்றனர். ஆனால் இதுவரை என்ன செய்தார்கள். அனைத்து ஆவணங்களும் மக்களிடம் இருக்கிறது

குறிப்பிட்ட அவகாசம் அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். வள்ளுவர் கோட்டம் உட்பட பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தானே? முதல்வர் இந்த தொகுதியில் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்.

திமுகவை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அங்கு ஜனநாயகம் இல்லை. இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தர்மபுரியில் கூட்டம் நடத்தினோம். அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் வாக்குகள் மட்டும் வேண்டும்" என்றார்

 தொடர்ந்து பேசிய அவர், " கருத்துரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடந்த காலத்தில் நானும் பழிவாங்கப்பட்டுள்ளேன். ஈழத்தமிழர்கள் பற்றி பேசி சிறையில் ஒரு ஆண்டு காலம் நான்இருந்துள்ளேன் .

என் உரிமை, என் கூட்டத்தில் செருப்பை காட்டி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை தொட முடியவில்லை. அதனால் என் கூட இருப்பவர்கள் கைது செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு சிரமத்தை உருவாக்குகிறார்கள். அதிகாரத் திமிரில் , அரசியல் அநாகரிகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது " என்று காட்டமாக தெரிவித்தார்.