விஜய் பக்கா மாஸ் கிடையாது, பயங்கரமான லூஸ்- கடுமையாக விமர்ச்சித்த சீமான்
நாம் தமிழர் கட்சி வழக்கம் போல இந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது.
அனைத்து கட்சிகளுக்கும் முன்பாகவே வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தனது பிரச்சாரங்களில் இலவச திட்டங்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்ற அவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயையும் குறிவைத்து பேசி வருகிறார்.
காரைக்குடியில் நடந்த பரப்புரையில், விஜயின் தேர்தல் வாக்குறுதிகளை சீமான் கடுமையாக விமர்சித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, வேலை இல்லா பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 வழங்கும் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமா என கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது குடும்பத்தினருக்கே கடன் வழங்கியதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பணம் வழங்குவது எப்படி சாத்தியம் என்றும் சீமான் விமர்சித்தார்.
எங்க இருந்து இந்த பணத்தை கொடுப்பார். இவர் பக்கா மாஸ் கிடையாது, பயங்கரமான லூஸ் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்குகளை விஜய் ஈர்க்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இத்தனை நாட்களாக இந்த இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்றிருந்தது.
இதனிடையே, காரைக்குடிக்கு வந்த விஜய் பேசாமல் திரும்பிச் சென்றது அண்ணன் மீது உள்ள பாசத்தால் தான் பேசாமல் சென்றார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.