பெட்டிபெட்டியாக வைத்திருக்கிறேன்; வீட்டிற்கு போனால் அது கிடைக்கும் - சீமான் பரபரப்பு பேட்டி!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடுளுமன்ற தேர்தல் குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மகளிர் உரிமைத் தொகை கேட்டு மக்களோ இல்லை கல்லூரி பெண்களோ ரூ.1000 கொடுங்கள் என்று போராட்டம் நடத்தினார்களா.
நீங்கள் கொடுக்கிறீர்கள், அதனால் மக்கள் எதிர்க்கவில்லை, வாங்கிக் கொள்கிறார்கள். இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் கிடையாது, அது கவர்ச்சி திட்டம்.
சீமான் பேட்டி
ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய் என்றால் ஒரு நாளுக்கு 30 ரூபாய். ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத அளவிற்கு மக்களை பிச்சைக்காரனாக்கி வைத்திருக்கிறீர்கள். என்னுடைய வீட்டில் கத்தரிக்கா, வெண்டைக்காய், தக்காளி பறிக்க வேலைக்கு வருபவர்களுக்கு ரூ.500 சம்பளம் கொடுக்கிறேன்.
அதுபோக அவர்கள் ஆண்களாக இருந்தால் ஒரு குவாட்டர் கூட கொடுக்கிறேன். சீமான் வீட்டிற்கு போனால் குவாட்டர் கொடுப்பான் என்று வருகிறார்கள். எனது அம்மா சொல்கிறார்கள் 'அதை கொடுத்தாதான் வேலைக்கு வருகிறார்கள் என்று.
நான் பேட்டி பெட்டியாக குவாட்டர் கொண்டு போய் இறக்கி, 500 ரூபாயுடன் ஒரு குவாட்டர் கொடுத்தால்தான் வேலைக்கு வருகிறார்கள். இல்லையென்றால் 100 நாள் வேலைக்கு சென்று சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள்" என்று சீமான் பேசியுள்ளார்.