இதை மட்டும் பண்ணுங்க.. அரசியலை விட்டே போயிடுறேன் - சீமான் சவால்!

Naam tamilar kachchi Tamil nadu Seeman Kallakurichi
By Jiyath Jun 26, 2024 02:40 AM GMT
Report

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். 

சீமான் 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை மட்டும் பண்ணுங்க.. அரசியலை விட்டே போயிடுறேன் - சீமான் சவால்! | Ntk Seeman About Kallakurichi Issue

இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் "கள்ளுக்கடையை திறக்க வலிக்குது..

கள்ளச்சாராயம் மட்டும் காய்ச்சு வித்திட்டிருப்பியா நீ? தமிழ்நாட்டில் எதுக்கு கள்ளுக்கடையை திறக்க மாட்ற. கள்ளு குடிச்சு செத்தவன் ஒருத்தனை காட்டு எனக்கு. அப்படி காட்டிட்டா, அரசியலை விட்டே போயிடுறேன்.

தமிழகம் போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது - ஈபிஸ் குற்றச்சாட்டு!

தமிழகம் போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது - ஈபிஸ் குற்றச்சாட்டு!

மதுபான தொழிற்சாலை

உணவின் ஒரு பகுதி கள்ளு என்று அரசியலமைப்பே சொல்லது. சங்க இலக்கியங்களிலேயே இதற்கு குறிப்பு இருக்கு. அதியமானும், ஒளவையாரும் கள்ளு குடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்கனு பாடலே இருக்கு.

இதை மட்டும் பண்ணுங்க.. அரசியலை விட்டே போயிடுறேன் - சீமான் சவால்! | Ntk Seeman About Kallakurichi Issue

கள் உண்பது தமிழன் கலாச்சாரம். தென்னம் பாலும், பனம் பாலும் எங்கள் மூலிகை பானம். அதை நீ திறக்க மாட்ற. கேரளாவில் கள் இருக்கு. புதுச்சேரியில் கள் இருக்கு. கர்நாடகாவில் கள் இருக்கு. ஏன் தமிழ்நாட்டுல மட்டும் கள்ளுக்கடை இல்ல.

ஏனென்றால் இங்கே ரெண்டு கட்சிக்காரர்களும் மதுபான தொழிற்சாலை நடத்திட்டு இருக்கான். கள்ளுக்கடை திறந்துவிட்டால் அவனோட தொழில் படுத்துரும்ல. அதனால்தான் திறக்க மாட்றான்" என்று தெரிவித்துள்ளார்.