திருத்தணியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய சீமான்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றது.
இந்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த 19-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மொத்தம் 49 தலைப்புகளில் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த சீமான் இன்று திருத்தணியில் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்
இன்னும் தேர்தலுக்கு 30 தினங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளும் அதிமுக கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
குறிப்பாக இந்த சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் நிலையில், தற்போது புதியதாக ராமதாஸ் சசிகலா கூட்டணியும் உருவாகியுள்ளதால், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாகியுள்து.

மேலும், திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக சீமான் தமிழ் தேசியத்தை கையில் எடுத்துள்ளார்.தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களிலும் , நாடாளுமன்ற தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறார். எனவே இந்த சட்டமன்ற தேர்தல் சீமானுக்கு முக்கியத் தேர்தலாக அமைகின்றது.
குறிப்பாக விஜயின் அரசியல் வருகையால், இளைஞர்கள் வாக்குகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அடிப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுவரையில் சீமானின் தமிழ் எழுச்சி பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக விஜய் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாம் தமிழர் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் நாம்தமிழர் கட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அங்கிகரீக்கப்பட்ட கட்சியாகவும் முன்றாவது சக்தியாக இருப்பதால் வாக்கு சதவீதத்தை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் சீமான் தற்பொழுது செயல்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மார்ச் 19 ஆம் தேதி நாம்தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இதில் சுமார் 49 தலைப்புகளில் சீமான் தன்னுடைய வாக்குறுதிகளை வெளியிட்டு இருந்தார். அதில், மாணவர்களின் கல்வி கடன் ரத்து, இடஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை, ஆற்று நீரை பயன்படுத்தி குளிர்பானம் தயாரிக்க தடை,60 வயது மதிக்கதக்க விவசாயிகளுக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக சீமான் கடவுள் முருகனை தன்னுடைய முப்பாட்டான் என்று கூறி வரும் நிலையில், இன்று திருத்தணியில் சீமான் காலை 10.30 மணி அளவில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கும் 4 அல்லது 5 இடங்களில் சீமான் பிரச்சாரத்தை மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற் தேர்தலில் நாதக சீமான் சென்னையில் உள்ள திருவொற்றியூரில் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.