நாதக நிர்வாகி கார்த்திகா கைது
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகாவை போலிசார் கைது செய்துள்ளனர்.
இன்று அவரது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர், அவருடன் சேர்ந்து கார்த்திகாவின் கணவர் மற்றும் 4 பேரை கைது செய்துள்ளனர்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகா, கடந்த 4ம் தேதி வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது முதலமைச்சர் வருவதற்கு முன்பாக கார்த்திகா தொண்டர்களுடன் வந்த போது பாதுகாப்பு கருதி மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதுதொடர்பாக வழக்குபதிவு செய்ததில் கார்த்திகா தலைமையிலான நாதக-வினர் போலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர், இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil