நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை 2026
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால்,
* 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும். மதுரையை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், சென்னையை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோவையை தொழில் தலைநகராகவும், கன்னியாகுமரியை தமிழர் மெய்யியல் தலைநகராகவும், திருச்சியில் நிர்வாகத் துறை தலைநகராகவும் மாற்றப்படும்.
*அனைவருக்கும் அரசு வேலை.
*1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயிற்சி முறைக் கல்வி பயிற்றுவிக்கப்படும்.
*குடிநீர் விற்பனைக்குத் தடை. கடலில் வீணாக 2,300 டிஎம்சி மழைநீர் கலப்பதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்படும்.
*மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரிகளில் மாநிலத்துக்கு 75 சதவிகிதமும், மத்திய அரசுக்கு 25 சதவிகிதமும் வழங்க வலியுறுத்தப்படும்.
*வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்படும் வகையில், 100 சதவிகிதம் வாக்களித்ததற்கான அரசின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படும்.
*மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படும்.
*3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்டு வரப்படும்.
*பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளாக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை.
*60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
*படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும்
*மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்
*ஆங்கில மருத்துவம் தமிழ் வழியில் நடத்தப்படும்
*பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையை“ பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்கப்படும்