காசுக்காகவே சீமான் மீது பொய்யான புகார்...நா.த.கவினர் போலீசில் புகார்
நடிகை விஜயலக்ஷ்மி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பணம் பறிக்கும் நோக்கில் வேண்டுமென்று பொய் புகாரை அளித்துள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
விஜயலக்ஷ்மி புகார் - சீமான் விளக்கம்
செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகை விஜயலக்ஷ்மியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இது தேவையற்ற கேள்வி என கூறிய சீமான், இதே மாதிரியான குற்றசாட்டு பல பேர் மீதுள்ளது என சுட்டிக்காட்டி, தேவையில்லாத விஷயத்தை ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடிகை விஜயலக்ஷ்மி திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். இந்நிலையில், விரைவில் சீமான் கைது செய்யப்படுவார் என பரவலாக கூறப்பட்டு வருகின்றது.
நா.த.க'வினர் புகார்
இதற்கிடையில், சீமானை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படை ஊட்டி விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலக்ஷ்மி மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் சென்னை மாநகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என குறிப்பிட்டு, மதநல்லிணக்கம், சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் இருவரும் நடந்துகொள்வதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா, இந்த புகாரை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில், விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் பேசி உள்ளனர். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு அவர்கள் சீமானிடம், 1 கோடி ரூபாய் பறிக்கும் முயற்சியில், அவர் மீது பொய் புகார் அளித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.