"தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்" - சீமான்

seeman ntk expresses support over neet issue
By Swetha Subash Jan 07, 2022 12:55 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழிக்கும் 'நீட்' தேர்வினை திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று,

ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மாணவச் செல்வங்களின் தொடர் தற்கொலைகளுக்குக் காரணமாகவுள்ள கொடிய 'நீட் தேர்வினை' நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும்

அதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான நன் முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை அளித்து, உறுதியாகத் துணைநிற்குமென்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசுக்கு அதிமுக ஆதரவு தருவதாக தெரிவித்த நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியும் துணை நிற்கும் என்று அக்கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.