சொந்த மண்ணில் களமிறங்கும் சீமான்

Seeman
By Fathima Feb 20, 2026 12:24 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சொந்த மண்ணான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

கட்சி தொடங்கிய காலம் முதல் தனித்தே களம் காணும் சீமான், 2026 தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறார்.

சொந்த மண்ணில் களமிறங்கும் சீமான் | Ntk Candidate List 2026 Seeman Karaikudi

மொத்தம் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

117 ஆண்கள்,117 பெண்கள் எனச் சம வாய்ப்புடன் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேமுதிக திடீர் முடிவு: NDA கூட்டணியில் சலசலப்பு- அடுத்தடுத்த பரபரப்பு

தேமுதிக திடீர் முடிவு: NDA கூட்டணியில் சலசலப்பு- அடுத்தடுத்த பரபரப்பு


இந்நிலையில் சீமான் தனது சொந்த மாவட்டமான காரைக்குடி தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி மேட்டூரிலும், இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யத்திலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கிலும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8 சதவிகித வாக்குகளை பெற்றதால், தேர்தல் ஆணையம் மாநில அந்தஸ்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணில் களமிறங்கும் சீமான் | Ntk Candidate List 2026 Seeman Karaikudi