நாம் தமிழர் கட்சி: 234 வேட்பாளர்கள் பட்டியல்
Seeman
By Fathima
திருச்சியில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற கருப்பொருளில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
சீமானின் தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.