இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி

Naam tamilar kachchi
By Karthikraja Sep 13, 2026 10:31 AM GMT
Report

 NTK announced candidates for madurantakam and dharapuram by election: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் தாராபுரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. செப்டம்பர் 15 ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளது.

தற்போது நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி | Ntk Announced Candidates For By Election

மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ச.கார்த்திக் குமாரி போட்டியிடுவார் என அறிவிக்கபட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட கோ.ஜானகிராமன் 4,950 வாக்குகளும், கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிட்ட மு.கார்த்திகா 8,069 வாக்குகளும் பெற்றனர்.