மிரட்டும் கொரோனா தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு கொரோனா!

covid19 tamilnadu
By Irumporai May 13, 2021 06:39 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 30,621 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,99,485 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 2,41,54,769 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 19,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 12,98,945 ஆக உள்ளது.

கடந்த ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,768 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 1,83,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கடந்த ஒரே நாளில் 6,991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.