ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாத தவெக - புதுச்சேரியில் மீண்டும் என்ஆர் காங்கிரஸ்?
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, 4,441 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், எம்பியுமான வைத்திலிங்கம் தோல்வியடைந்துள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.