இப்ப இல்லைனா எப்பவும் இல்ல: ரஜினியை வம்பிழுக்கும் ராதிகா
தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக சரத்குமார் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மைச் துணை பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசனை சந்தித்த சரத்குமார் சந்தித்ததால் இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் இன்று சரத்குமார் அதனை உறுதிசெய்தார். பிறகு கட்சி கூட்டத்தில் பேசிய சரத்குமார் மக்கள் நீதி மய்யம் ,சமத்துவ மக்கள் கட்சி , ஐஜேகே கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன் தான்என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு பிறகு ராதிகா பேசும்போது, கடுமையாக உழைப்பின் மூலம் இந்த உயர்ந்த இடத்தை சரத்குமார் அடைந்துள்ளார். சரத்குமார் உத்தரவிட்டால் கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் போட்டியிடுவேன் என கூறினார். மேலும், மதவாத சக்தியோடு அதிமுக இணைந்துள்ளதாக கூறிய ராதிகா.
அதிமுக சொல்வதையெல்லாம் கேட்பதற்கு நாங்கள் கறிவேப்பிலையா? கொத்தமல்லியா? ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் சரத்குமார் இருந்துள்ளார். அவர் இல்லாத இடத்தில் மற்றவர் பேச்சை கேட்டுக் கொண்டு இருக்க விருப்பமில்லை. இப்ப இல்லைனா எப்பவும் இல்ல என்று கூறி நாடகம் ஆடுவதை விட்டு அரசியலில் நான் களமிறங்கியிருக்கிறேன் என ராதிகா பேசினார்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்காக தனது ரசிகர்களிடம் இப்ப இல்லைனா எப்பவும் இல்ல என்ற வாசனம் பிரபலமானது பின்னர் அரசியல் ஈடுபடப் போவதில்லை என ரஜினி விலகினார்.
இந்த நிலையில் தற்போது அரசியலுக்கு வந்துள்ள ராதிகா ரஜினியை விமர்சித்து பேசியுள்ளார்.