ரேசன் அட்டைதாரர்களுக்கு இனி இந்த பொருட்கள் எல்லாம் இலவசம் - எங்கே தெரியுமா?

Uttarakhand
By Thahir Jan 24, 2023 01:40 AM GMT
Report

ரேஷன் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குட் நியூஸ். இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்துபவரா நீங்கள்?. உங்களுக்கு அரசாங்கம் மற்றொரு சிறப்பு திட்டத்தை உருவாக்கி உள்ளது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ரேசனில் மற்ற பொருட்கள் இலவசம் 

இந்த சிறப்பு திட்டம் என்னவென்றால், இனிமேல் இலவச கோதுமை, அரிசி தவிர மற்ற பொருட்களையும் இலவசமாக வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் மற்ற பொருட்களையும் நீங்கள் மிக குறைந்த விலையில் வாங்கலாம். உணவுத்துறை அமைச்சரிடம் இருந்து கிடைத்த தகவல் ஆனது, மத்திய அரசுடன், மாநில அரசும் பல வகையான வசதிகளை செய்து தருகிறது.

ரேசன் அட்டைதாரர்களுக்கு இனி இந்த பொருட்கள் எல்லாம் இலவசம் - எங்கே தெரியுமா? | Now All These Items Are Free In Ration Shops

இந்நிலையில், உத்தரகாண்ட் அரசு 23 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ரேஷன், சர்க்கரை மற்றும் உப்பு தவிர பிற பொருட்களையும் குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுக்கு ரூ.65 லட்சம் கோடி கூடுதல் செலவு 

இதை பற்றி உத்தரகாண்ட் மாநில உணவுத்துறை அமைச்சர் தந்த கூடுதல் தகவலின் படி, இந்த திட்டத்துக்கான பட்ஜெட் திட்டத்தையும் தயாரித்துள்ளது.

மேலும், இந்த பட்ஜெட் விவரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும். பின் இத்திட்டத்தை அமல்படுத்திய பிறகு, மாநில அரசுக்கு கூடுதலாக 65 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர், 2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரேசன் பொருட்களுக்கு மானியம் 

இந்நிலையில், இந்த ஆண்டு முழுவதும், பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பலன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு சமையலறையிலும் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது.

மேலும், சர்க்கரைக்கு மானியம் வழங்கப்படம் என்றும் அவர் கூறியுள்ளார், அதன்படி சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ10 மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தற்போது இதை ரூ15 வரை உயர்த்தலாம். இதனுடன், கடந்த 6மாதங்களாக ரேஷன் கார்டுகளில் ரேஷன் எடுக்காத அனைத்து அட்டைதாரர்களின் அட்டைகளையும் ரத்து செய்யப்படலாம் எனவும் மாநில அரசு தகவல் அளித்துள்ளது.