தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இரு நாட்களில் சவரனுக்கு ரூ.4,680 அதிகரிப்பு!

Silver Gold
By Vinoja Nov 05, 2026 06:29 AM GMT
Report

Gold Rate in Tamilnadu chennai : தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கத் தேர்தல் எதிரொலியாக நேற்று (நவம்பர் 4) காலையில் உயர்ந்த தங்கம் விலை, மதிய வேளையிலும் மீண்டும் அதிரடியாக அதிகரித்தது. இதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,100 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,04,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இரு நாட்களில் சவரனுக்கு ரூ.4,680 அதிகரிப்பு! | November 5Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரம் 

இந்நிலையில், இன்று (நவம்பர் 5) மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.285 அதிகரித்து ரூ.13,385 ஆகவும், சவரனுக்கு ரூ.2,280 அதிகரித்து ரூ.1,07,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இரு நாட்களில் சவரனுக்கு ரூ.4,680 அதிகரிப்பு! | November 5Th 2026 Gold And Silver Price In Chennai

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4,680 உயர்ந்துள்ளது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ரூ.10,955 ஆகவும், சவரனுக்கு ரூ.1,800 அதிகரித்து ரூ.87,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இரு நாட்களில் சவரனுக்கு ரூ.4,680 அதிகரிப்பு! | November 5Th 2026 Gold And Silver Price In Chennai

இதற்கிடையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.210 ஆகவும், ஒரு கிலோ ரூ.2,10,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.