ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Silver Gold
By Vinoja Nov 04, 2026 05:48 AM GMT
Report

அக்டோபர் மாத இறுதியில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

நேற்று (நவம்பர் 3) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800 ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! | November 4Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரம் 

இந்நிலையில், இன்றும் (நவம்பர் 4) தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.25 உயர்ந்து ரூ.12,825 ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! | November 4Th 2026 Gold And Silver Price In Chennai

இதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.10,495 ஆகவும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.83,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! | November 4Th 2026 Gold And Silver Price In Chennai

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியிலும்,முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது.