தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
அக்டோபர் மாத இறுதியில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்ததால் நகை வாங்கக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் நவம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.நேற்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், இன்றும் அதன் விலை அதிகரித்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400 ஆக உள்ளது.
இதேபோல், 18 காரட் தங்கம் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.10,475 ஆகவும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.83,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.