நவம்பர் தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?

Silver Gold
By Vinoja Nov 02, 2026 06:00 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (நவம்பர் 2) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நகை வாங்குவோர் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது. 

அக்டோபர் மாத இறுதியில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த விலை நிலவரத்தின்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கும், சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு? | November 2Nd 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய விலை நிலவரம் 

இந்நிலையில், மாதத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை  மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.12,775-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,02,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு? | November 2Nd 2026 Gold And Silver Price In Chennai

அதேவேளை, வெள்ளி விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.