தங்கம் விலை மீண்டும் சரிவு - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 வீழ்ச்சி!
Today Gold Rate: இன்றைய (நவம்பர் 18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.குறிப்பாக, கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து வருவதால் நகை வாங்கக் காத்திருப்போர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.9,840 வரை சரிவடைந்துள்ளது.
நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,215 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.2,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.97,720 ஆக விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்
இன்றும் தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,980 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.1,880 குறைந்து, தற்போது ஒரு சவரன் ரூ.95,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.9,805க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.78,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.180க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.